போக்குவரத்து காவல் துறைக்கு பேரி கார்டுகள் வழங்கல்

65பார்த்தது
போக்குவரத்து காவல் துறைக்கு பேரி கார்டுகள் வழங்கல்
விக்கிரவாண்டியில் விபத்துகளைத் தடுக்கும் பொருட்டு போக்குவரத்து போலீசாருக்கு பேரி கார்டு மற்றும் உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

நிகழ்ச்சிக்கு, டி. எஸ். பி. , சுரேஷ் தலைமை தாங்கினார். போக்குவரத்து இன்ஸ்பெக்டர் வசந்த் முன்னிலை வகித்தார். சப் இன்ஸ்பெக்டர் துரைராஜ் வரவேற்றார்.

புதுச்சேரி ராம் தங்க நகை மாளிகை சார்பில் விக்கிரவாண்டி போக்குவரத்து காவல் பிரிவிற்கு சாலை விபத்துகளைத் தடுக்கும் பொருட்டு 4 லட்சம் ரூபாய் மதிப்பிலான 20 பேரி கார்டுகளையும், போக்குவரத்து சிக்னல் லைட், பிரதிபலிப்பான் உடைகளையும் நிறுவனத்தின் சார்பில் பிரதிநிதிகள் ஓவியர் தேவ், துரை ஆகியோர் டி. எஸ். பி. , சுரேஷிடம் ஒப்படைத்தனர்.

டோல்கேட் பி. ஆர். ஓ. , தண்டபாணி, மேலாளர்கள் அசோக்குமார், மனோஜ் குமார், சொர்ணமணி, கணக்கு அலுவலர் சுடலைமுத்து, தொழில்நுட்ப பிரிவு சுப்ரமணி உட்பட பலர் பங்கேற்றனர்.
Job Suitcase

Jobs near you