விக்கிரவாண்டி தொகுதி காணை ஒன்றியம் அடங்குணம் கிராமத்தை சேர்ந்தவர் ஏழுமலை, 55: கூலித் தொழிலாளி. இவரது முன்னாள் மனைவி கனிமொழி, 49: தற்பொழுது இவர் திருவண்ணாமலை அடுத்த வேட்டவலத்தில் வசித்து வருகிறார். காலை விக்கிரவாண்டி தொகுதி இடைத் தேர்தலில் ஓட்டுப்பபோடுவதற்காக முன்னாள் கணவரின் ஊரான அடங்குணத்திற்கு வந்தார். காலை 11 மணியளவில் டி. கொசப்பாளையத்தில் பூத் எண் 40 ல் ஓட்டளிக்க வரிசையில் நின்றிருந்தார். அப்போது அங்கு வந்த ஏழுமலை, முன்னாள் மனைவி கனிமொழியை பார்த்தவுடன் தகராறில் ஈடுபட்டு , அவரை மறைத்து வைத்திருந்த கத்தியால் குத்தினார். கனிமொழி கூச்சலிடவே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் ஏழுமலையை பிடித்து கஞ்சனுார் போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்தனர். கைது செய்யப்பட்ட ஏழுமலை மீது இரு கொலை வழக்குகள் நிலுவையில் உள்ளதும், கருத்துவேறுபாடு காரணமாக ஏழுமலையை பிரிந்து வேறு ஒருவருடன் வாழ்ந்து வருவதால் ஏற்பட்ட ஆத்திரத்தில் ஏழுமலை கத்தியால் குத்தியது முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. கனிமொழி முதலுதவி சிகிச்சை பெற்று சிறிது நேரம் கழித்து வந்து தனது ஓட்டை பதிவு செய்தார். இதனால் ஓட்டுச்சாவடி பகுதியில் சற்று நேரம் பரபரப்பு ஏற்பட்டது.