குரூப்-1 தேர்வு இலவச பயிற்சி வகுப்பு

66பார்த்தது
குரூப்-1 தேர்வு இலவச பயிற்சி வகுப்பு
விழுப்புரம் மாவட்ட வேலை வாய்ப்பு மையம் சார்பில் நடந்து வரும், டி. என். பி. எஸ். சி. , குரூப்-1 தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பில் பங்கேற்க விண்ப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
மாவட்ட வேலை வாய்ப்பு மையம் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பு: அரசுப் பணியாளர் தேர்வாணையம் குரூப்-1 பதவிகளுக்கான 90 காலி பணியிடங்களுக்கு தேர்வு நடத்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இத்தேர்விற்குண்டான முதல் நிலைத் தேர்வு வரும் ஜூலை 13ம் தேதி நடபெற உள்ளது. தொடர்ந்து விழுப்புரம் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும்மையம் சார்பில் இந்த முதல்நிலை தேர்விற்கு, இலவச பயிற்சி வகுப்புகள், ஏற்கனவே சிறந்த வல்லுநர்களைக் கொண்டு கடந்த ஏப்ரல் 15ம் தேதி துவங்கி நடத்தப்பட்டு வருகிறது. இதற்கான பாட குறிப்புகள் இலவசமாக வழங்கப்படுவதோடு, மாதிரி தேர்வுகளும் நடத்தப்பட உள்ளன. மேலும், தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் குரூப் 1 தேர்விற்குண்டான இலவச பயிற்சி வகுப்புகளில் பங்கேற்க விருப்பமும், தகுதி யும் உள்ள போட்டித் தேர் விற்கு தயாராகிக் கொண்டிருக்கும் இளைஞர்கள், பாஸ்போர்ட் அளவு புகைப்படத்துடன் அலுவலக வேலை நாட்களில் நேரில் ஆஜராகி பெயரை பதிவு செய்து பயிற்சியில்பங்கேற்று பயன்பெறலாம். இவ்வாறு செய்திக்குறிப் பில் கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி