விழுப்புரத்தில் தமிழ்நாடு அரசுத்துறை ஊர்தி ஓட்டுனர் சங்கத்தின் மாவட்ட செயற்குழு கூட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் சிவக்குமார் தலைமை தாங்கினார். ஆலோசகர் சுகுந்தகுமார் சிறப்புரையாற்றினார். அரசுத்துறை ஊர்தி ஓட்டு னர்களுக்கு பயணப்படி வழங்குவது தொடர்பாகவும் மற்றும் கடந்த லோக்சபா தேர்தலில் பணிபுரிந்த ஓட்டுனர்களுக்கு பயணப்படி விரைந்து வழங்க வேண்டும், அரசுத்துறை ஊர்தி ஓட்டுநர்களுக்கு இலவச வீட்டு மனை வழங்க வேண்டும், சீருடை, காலணிகள் வழங்கிட வேண்டும், பல்வேறு அரசுத் துறையில் காலியாக உள்ள ஓட்டுநர் காலி பணியிடங்களை நிரப்பிட வேண்டும் உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றினர்.