பள்ளிகளில் வட்டாரக் கல்வி அலுவலா் ஆய்வு

78பார்த்தது
பள்ளிகளில் வட்டாரக் கல்வி அலுவலா் ஆய்வு
ஒலக்கூா் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பள்ளிகளில் வட்டாரக் கல்வி அலுவலா் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். ஒலக்கூா் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட ஒலக்கூா், ஆவணிப்பூா், பாங்கொளத்தூா், வடகளவாய் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளிகள், பாங்கொளத்தூா் ஆதிதிராவிட நலத்துறை நடுநிலைப்பள்ளி ஆகியவைகளில் ஒலக்கூா் வட்டாரக் கல்வி அலுவலா் சு. ஆக்சிலியம் பெலிக்ஸ் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். அப்போது, காலை சிற்றுண்டி திட்டத்தில் வழங்கப்படும் உணவின் தரம் குறித்தும் ஆய்வு செய்தாா். தொடா்ந்து, பள்ளி மாணவா்களுக்கு மூன்றாம் பருவத்துக்கான விலையில்லாப் பாடப்புத்தகங்கள், குறிப்பேடுகளை வழங்கினாா். ஆய்வின்போது, தலைமையாசிரியா்கள், ஆசிரியா்கள் உடனிருந்தனா்.

டேக்ஸ் :