விழுப்புரத்தில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

59பார்த்தது
விழுப்புரத்தில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
விழுப்புரத்தில் காங்., சார்பில், அம்பேத்கரை விமர்சித்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது. விழுப்புரம் நகராட்சித் திடலில் மத்திய மாவட்ட காங்., சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு, நகர தலைவர் செல்வராஜ் தலைமை வகித்தார். அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் சிறுவை ராமமூர்த்தி, மாநில அழைப்பாளர் பாலசுப்பிரமணியன் முன்னிலை வகித்தனர். மாநில செயலர் தயானந்தம் சிறப்புரையாற்றினார். 

ஆர்ப்பாட்டத்தில் சட்டமேதை அம்பேத்கரை விமர்சித்து பேசிய மத்திய அமைச்சர் அமித்ஷாவை கண்டித்தும், அவரை பதவி விலக வலியுறுத்தியும் கண்டன கோஷமிட்டனர். நகர்மன்ற உறுப்பினர் சுரேஷ்ராம், மாவட்டத் துணைத் தலைவர் ராஜ்குமார், பொதுச் செயலர்கள் விஸ்வநாதன், சிவக்குமார், இளைஞர் காங்., மாவட்ட தலைவர் ஸ்ரீராம், துணைத் தலைவர் சந்தானகிருஷ்ணன், தொகுதி தலைவர் பிரபாகரன், எஸ்.சி., அணி தலைவர் சேகர் உள்ளிட்ட கட்சியினர் பலர் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்தி