விக்கிரவாண்டி அருகே விபத்து போலீசார் விசாரணை

70பார்த்தது
விக்கிரவாண்டி அருகே விபத்து போலீசார் விசாரணை
சென்னை நோக்கிச் சென்ற தனியாா் சொகுசுப் பேருந்து, விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அடுத்த சித்தணி அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது முன்னால் சென்ற சரக்கு லாரி மீது அந்த சொகுசுப் பேருந்து மோதியது. இதில், பேருந்தில் பயணித்த சிவகங்கை மாவட்டம், காளையாா்கோயில் மூா்த்தி நகரைச் சோ்ந்த அருள்ராஜ் மகன் ஆகாஷ்ராஜா(21), அவரது தாய் கீதா மெத்ரின்( 52), ராமநாதபுரம் மாவட்டம், கடலாடியைச் சோ்ந்த மு. அப்துல் ரஷீத் (30 ), முதுகுளத்தூரைச் சோ்ந்த ரா. ராஜா சேதுபதி(34), சென்னை, வண்டலூரைச் சோ்ந்த பாபு மனைவி இந்துமதிராணி (46) ஆகியோா் காயமடைந்தனா். தகவலறிந்த போலீஸாா் நிகழ்விடம் சென்று காயமடைந்தவா்களை மீட்டு விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனா். இந்த விபத்தால் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அரை மணி நேரத்துக்கு மேலாக போக்குவரத்துப் பாதிக்கப் பட்டது. இது குறித்த புகாரின் பேரில் விக்கிரவாண்டி போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி