விக்கிரவாண்டி அடுத்த வி. சாலையில், ஊராட்சி தலைவர் சாவித்ரி கவியரசன் தலைமை தாங்கினார். உதவி திட்ட அலுவலர் ராஜேந்திரன், பி.டி.ஓ.க்கள் சுபாஷ் சந்திரபோஸ், நாராயணன் முன்னிலை வகித்தனர். ஊராட்சி செயலாளர் அலமேலு வரவேற்றார். மாவட்ட சேர்மன் ஜெயச்சந்திரன் பொதுமக்கள் குறைகளை கேட்டறிந்தார். கலைஞர் வீடு கட்டும் திட்டம், சாலை வசதி, வீட்டுமனை பட்டா, கூடுதல் ரேஷன் கடை, தெரு விளக்கு வசதி கேட்டு கோரிக்கை விடுத்தனர். ஒன்றிய தலைவர் முரளி, கவுன்சிலர் சாவித்திரி பாலு, கிளைச் செயலாளர் குமரவேலு, கலை இலக்கிய அணி கலைச்செல்வன், மாணவரணி கருணாநிதி ராஜன், வழக்கறிஞர் கேசவன், ஊராட்சி உறுப்பினர்கள் பொதுமக்கள் பங்கேற்றனர்.