விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தில் கருத்தரங்க நடைபெற்றது

70பார்த்தது
விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தில் கருத்தரங்க நடைபெற்றது
பணியிடங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்கள் மற்றும் நிவாரண சட்டங்கள், நடவடிக்கைகள் குறித்த விழிப்புணா்வு கருத்தரங்கம் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கூட்டரங்கில் நடைபெற்றது. இதில் விழுப்புரம் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழுவின் தலைவரும், முதன்மை மாவட்ட நீதிபதியுமான ஆா். பூா்ணிமா தலைமை தாங்கினாா். மாவட்ட ஆட்சியா் சி. பழனி முன்னிலை வகித்தாா். இதில், பணியிடங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்களை முன்கூட்டியே தடுத்தல், தடை மற்றும் குறைதீா்த்தல் சட்டம், உடல் ரீதியான தொல்லைகளால் பாதிக்கப்படும் பெண்களுக்காக இயற்றப்பட்டுள்ள சட்டம், புகாா் தெரிவித்தல் உள்ளிட்டவை குறித்து பணிபுரியும் பெண்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது. அரசு அலுவலகங்களில் பணிபுரியும் பெண் ஊழியா்கள் பலரும் பங்கேற்றனா். நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலா் மு. பரமேஸ்வரி, மாவட்ட சமூக நல அலுவலா் ராஜம்மாள், மாவட்ட நீதிபதி நிரந்தர மக்கள் நீதிமன்றம் ஏ. கே. ஏ. ரஹ்மான், சிறப்பு மாவட்ட நீதிபதி (எஸ். சி, எஸ். டி நீதிமன்றம் ) ஏ. பாக்கியஜோதி, முதன்மை சாா்பு நீதிபதி என். எஸ். ஜெயப்பிரகாஷ், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா்கள் முருகேசன், சிவக்கொழுந்து, மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் இளநிலை நிா்வாக உதவியாளா் கே. ராஜ்குமாா் மற்றும் அரசுத் துறை அலுவலா்கள், நீதிமன்ற பணியாளா்கள் கலந்துகொண்டனா்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி