விக்கிரவாண்டி தொகுதி எம். எல். ஏ. , புகழேந்தி கடந்த ஏப்ரல் மாதம் 6ம் தேதி உடல் நலக்குறைவால் இறந்தார். தொகுதிக்கு இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டு, நேற்று ஓட்டுப்பதிவு நடந்தது. இதில் ஆண் வாக்காளர்கள் 95 ஆயிரத்து 536 பேர், பெண் வாக்காளர்கள் 99 ஆயிரத்து 944 பேர், இதர வாக்காளர்கள் 15 பேர் என மொத்தம் ஒரு லட்சத்து 95 ஆயிரத்து 495 பேர் தங்களது ஓட்டை பதிவு செய்தனர். இதன்படி 82. 48 சதவிகிதம் ஓட்டு பதிவாகியுள்ளது. ஓட்டு பதிவிற்கு பிறகு கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களுக்கு சீல் வைக்கப்பட்டது. கடந்த 2019 இடைத்தேர்தலின் போது 84. 35 சதவீதமும், 2021 பொது தேர்தலின் போது 82. 04 சதவீதமும் ஓட்டு பதிவானது. கடந்த தேர்தலை விட இந்த தேர்தலில் 0. 44 சதவிகிதம் கூடுதலாக ஓட்டு பதிவாகியுள்ளது.