444 வழக்குகளுக்கு ஒரே நாளில் தீர்வு காணப்பட்டது

68பார்த்தது
444 வழக்குகளுக்கு ஒரே நாளில் தீர்வு காணப்பட்டது
விழுப்புரம் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் நடந்த லோக் அதாலத்தை, முதன்மை மாவட்ட நீதிபதி பூர்ணிமா துவக்கி வைத்தார். இந்த வழக்குகளில் தீர்வு காண வேண்டும் என விரும்புவோர், கடிதம் ஒன்றை அளித்தால் போதும். அந்தந்த மாவட்ட நீதிமன்றம் மூலம் இதற்கான ஏற்பாடு செய்யப்படும். காணொலி காட்சி மூலம் வழக்கில் பங்கேற்பதற்குரிய ஏற்பாடுகள் செய்து தரப்படும். விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்தோர் யாரேனும் ஐகோர்டில் வழக்கு தொடர்ந்து, நிலுவையில் இருந்தால் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளலாம். இந்த சிறப்பு நடவடிக்கை பற்றி பொதுமக்களுக்கு எடுத்துரைக்கப்படும். இவ்வாறு நீதிபதி பூர்ணிமா பேசினார்.

இதில், மோட்டார் வாகனம், விபத்து, காசோலை, நிலம், வங்கி கடன் சம்பந்தப்பட்ட 444 வழக்குகள் எடுத்து கொள்ளப்பட்டு, 3 கோடியே 26 லட்சத்து 54 ஆயிரத்து 230 ரூபாய்க்கு சமரச முறையில் தீர்வு காணப்பட்டது.

தொடர்புடைய செய்தி