ரயில்வே தளவாட பொருட்களை திருட 2 சிறுவர்கள் சிக்கினர்

78பார்த்தது
ரயில்வே தளவாட பொருட்களை திருட 2 சிறுவர்கள் சிக்கினர்
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி சப் இன்ஸ்பெக்டர் காத்தமுத்து மற்றும் போலீசார் நேற்று மாலை டோல் கேட் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஸ்பிளண்டர் பைக்கை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் அவர்கள், சாக்கு பையில் ரயில்வே இரும்பு தளவாட பொருட்களை திருடிச் சென்றது தெரிய வந்தது. விசாரணையில் இருவரும் வி. சாத்தனுார் ரயில்வே கேட் பகுதியிலிருந்து இரும்புகளை திருடியதும் அவர்கள் புதுச்சேரி பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவர்கள் என தெரியவந்தது. உடன் போலீசார் அவர்களிடமிருந்து ரயில்வே இரும்பு தளவாட பொருட்கள் மற்றும் பைக் ஆகியவற்றை பறிமுதல் செய்து இருவரையும் திண்டிவனம் ரயில்வே போலீசில் ஒப்படைத்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி