ஆரோவில் அருகே நீரில் மூழ்கி மாணவன் இறப்பு

68பார்த்தது
ஆரோவில் அருகே நீரில் மூழ்கி மாணவன் இறப்பு
புதுச்சேரி, குருசுகுப்பம், அஜீஸ் நகரைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் மகன் மிதுன் (17). புதுச்சேரியில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். இவர் தனது நண்பர்களுடன் விழுப்புரம் மாவட்டம், குயிலாப்பாளையத்தில் விவசாய நிலத்தில் உள்ள கிணற்றுக்கு குளிக்கச் சென்றார். அப்போது மிதுன் கிணற்று நீரில் மூழ்கி உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின் பேரில், ஆரோவில் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

தொடர்புடைய செய்தி