வானுார்: புதுமைப்பெண் திட்டத்தில் மாணவிகளுக்கு ஏ. டி. எம். , கார்டு

70பார்த்தது
வானுார்: புதுமைப்பெண் திட்டத்தில் மாணவிகளுக்கு ஏ. டி. எம். , கார்டு
வானூர் அரசு கல்லூரி மாணவிகளுக்கு, புதுமைப் பெண் திட்டத்தின் கீழ் ஏ.டி.எம். கார்டுகளை ஒன்றிய சேர்மன் உஷா முரளி வழங்கினார். பெண்களின் உயர்கல்வியை உறுதி செய்திடும் வகையில், தமிழக அரசு புதுமைப் பெண் திட்டத்தில் மாணவிகளுக்கு மாதம் ரூ.ஆயிரம் வழங்கி வருகிறது. 

இத்திட்டத்தை தற்போது, அரசு உதவி பெறும் பள்ளியில் படித்த உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தூத்துக்குடியில் துவக்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து, விழுப்புரம் மாவட்டத்தில் கலெக்டர் பழனி துவக்கி வைத்தார். 

இத்திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ள வானூர் அரசு கல்லூரி மாணவிகளுக்கு வங்கி ஏ.டி.எம். கார்டுகளை ஒன்றிய சேர்மன் உஷா முரளி வழங்கினார். கல்லூரி முதல்வர் வில்லியம், புதுமைப்பெண் திட்ட ஒருங்கிணைப்பாளர் காந்திமதி, தமிழ்ப்புலவன், திட்ட ஒருங்கிணைப்பாளர் எழிலரசி உடனிருந்தனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி