புதுார் முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிேஷக விழா

62பார்த்தது
புதுார் முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிேஷக விழா
புதுார் முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிேஷக விழா நடந்தது.

கிளியனுார் அடுத்த நல்லாவூர் மதுரா புதுார் கிராமத்தில் சுந்தர விநாயகர், முத்துமாரியம்மன், காளியம்மன் கோவில்கள் அமைந்துள்ளன.

இக்கோவில் திருப்பணிகள் முடிவடைந்து, கும்பாபிேஷக விழா நேற்று முன்தினம் துவங்கியது. அன்றயை தினம் காலை 8;30 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, மகா கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், கோ பூஜை மற்றும் பூர்ணாஜூதியும், மாலை 5;00 மணிக்கு முதற்கால யாகவேள்வியும் நடந்தது.

நேற்று காலை 7;00 மணிக்கு விக்னேஸ்வர பூஜையும், கோ பூஜையும், இரண்டாம் கால யாகவேள்வியும் நடந்தது.

தொடர்ச்சியாக காலை 9;00 மணிக்கு மேல் சுந்தர விநாயகர், முத்துமாரியம்மன் மற்றும் காளியம்மன் கோவில் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு மகா கும்பாபிேஷக விழா நடந்தது.

விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு, சுவாமி தரிசனம் செய்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை புதூர் கிராம மக்கள் செய்திருந்தனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி