அரசு மகளிர் கல்லுாரியில் 10ம் தேதி பொது கலந்தாய்வு

83பார்த்தது
அரசு மகளிர் கல்லுாரியில் 10ம் தேதி பொது கலந்தாய்வு
விழுப்புரம் எம். ஜி. ஆர். அரசு மகளிர் கலை அறிவியல் கல்லுாரியில் மாணவர்கள் சேர்க்கைக்கான பொது கலந்தாய்வு 10ம் தேதி நடக்கிறது.
கல்லுாரி முதல்வர் தாமோ தரன் செய்திக்குறிப்பு: விழுப்புரம் எம். ஜி. ஆர். , அரசு மகளிர் கலை அறிவியல் கல்லுாரியில், இந்தாண்டு மாணவர்கள் சேர்க்கைக்கு விண்ணப்பங்கள் பெறப்பட்டது. மொத்தம் உள்ள 690 இடங்களுக்கு 18 ஆயிரத்து 640 பேர் விண்ணப்பித்திருந்தனர். சிறப்பு ஒதுக்கீட்டிற்கான கலந்தாய்வு கடந்த மே 29ம் தேதி முதல் 30ம் தேதி வரை நடந்தது. இதனையடுத்து, பொது கலந்தாய்வு 10ம் தேதி துவங்க உள்ளது.
அதன்படி 10ம் தேதி பி. காம். , வணிகவியல் பிரிவுக்கு தர மதிப்பெண் 400-350; பி. காம். , வகேஷனல் பிரிவுக்கு 400-306; ஆங்கில வழிக்கு 100-70 மதிப்பெண் பெற்றவர்களுக்கும் நடக்கும். தொடர்ந்து 11ம் தேதி பி. ஏ. , தமிழ் பிரிவுக்கு 100-93 தர மதிப்பெண் பெற்றவர்களுக்கு நடக்கும். 12ம் தேதி பி. எஸ்சி. , 400---- - 310 தர மதிப்பெண்ணுக்கும், 13ம் தேதி பி. எஸ்சி. , 309 - 290 தர மதிப்பெண்ணுக்கும், 14ம் தேதி பி. ஏ. , கலை பாட பிரிவுகளுக்கும் 400-- - 320 தர மதிப்பெண்ணுக்கும், 15ம் தேதி 319- - --300 தர மதிப்பெண்ணுக்கும் கலந்தாய்வு நடக்கும்.
தினசரி காலை 9: 00 மணிக்கு துவங்கி மதியம் 1: 00 மணி வரை கலந்தாய்வு நடைபெறும். குறிப்பிட்ட நேரத்திற்கு பிறகு வருவோர் கலந்தாய்வில் கலந்துகொள்ள அனுமதிக்கப்படாது.

தொடர்புடைய செய்தி