விழுப்புரம் மாவட்டம், கிளியனுார் அடுத்த எறையானுார் ஜெய்அனுமான் நகரைச் சேர்ந்தவர் பாஸ்கரன், 57; இவர், தனது குடும்பத்துடன் கடந்த 1ம் தேதி சென்னைக்கு சென்றிருந்தார். நேற்று முன்தினம் இரவு 11: 00 மணிக்கு வீட்டிற்கு வந்தபோது, வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு, பீரோவில் இருந்த 10 ஆயிரம் ரூபாய், 2 கிலோ வெள்ளி பொருட்கள் திருடு போயிருப்பது தெரியவந்தது. புகாரின் பேரில், கிளியனுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.