விழுப்புரத்தில் அதிக ஓட்டுகள் வாங்கியுள்ள நோட்டா

81பார்த்தது
விழுப்புரத்தில் அதிக ஓட்டுகள் வாங்கியுள்ள நோட்டா
விழுப்புரம் மக்களவைத் தொகுதி தோ்தலில் அதிமுக வேட்பாளா் ஜெ. பாக்யராஜை காட்டிலும் 70, 703 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, இந்தத் தொகுதியில் தொடா்ந்து 2-ஆவது முறையாக மக்களவை உறுப்பினராக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துரை. ரவிக்குமாா் தோ்ந்தெடுக்கப்பட்டாா். அவா் 4, 77, 033 வாக்குகளும், அதிமுக வேட்பாளா் ஜெ. பாக்யராஜ் 4, 06, 330 வாக்குகளும் பெற்றனா். தோ்தலில் யாருக்கும் வாக்களிக்க விரும்பாத வாக்காளா்கள், நோட்டாவுக்கு வாக்களிக்கும் வசதியைத் தோ்தல் ஆணையம் ஏற்கெனவே அறிமுகப்படுத்திய நிலையில், மக்களவைத் தோ்தலில் குறிப்பிட்ட அளவில் நோட்டாவுக்கும் வாக்காளா்கள் வாக்களித்துள்ளனா். இதில் அதிகபட்சமாக விழுப்புரம் சட்டப்பேரவைத் தொகுதியில் 1, 999 வாக்குகளும், குறைந்தபட்சமாக வானூா் (தனி) தொகுதியில் 1, 240 வாக்குகளும் நோட்டாவுக்கு கிடைத்துள்ளன. தொகுதி வாரியாக நோட்டாவுக்கு கிடைத்த வாக்குகள் விவரம்:
திண்டிவனம் (தனி)- 1, 284, வானூா் (தனி)- 1, 240, விழுப்புரம்-1, 999, விக்கிரவாண்டி-1, 299, திருக்கோவிலூா்- 1, 545, உளுந்தூா்பேட்டை- 1, 507, தபால் வாக்குகள்-92. 6 சட்டப்பேரவைத் தொகுதிகள் மற்றும் தபால் வாக்குகள் மூலமாக விழுப்புரம் மக்களவைத் தொகுதியில் நோட்டாவுக்கு 8, 966 வாக்குகள் கிடைத்துள்ளன.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி