கோட்டகுப்பத்தில் இஃப்தர் நோன்பு விழாவில் கலந்துகொண்ட எம்எல்ஏ

55பார்த்தது
கோட்டகுப்பத்தில் இஃப்தர் நோன்பு விழாவில் கலந்துகொண்ட எம்எல்ஏ
கோட்டக்குப்பம் நகர தி.மு.க., சார்பில், இப்தார் நோன்பு நிகழ்ச்சி தைக்கால் திடலில் நடந்தது. நகர மன்ற தலைவர் ஜெயமூர்த்தி தலைமை தாங்கினார். துணைத் தலைவர் ஜீனத் பீ முபாரக் வரவேற்றார். சிறப்பு விருந்தினர் மத்திய மாவட்ட பொறுப்பாளர் லட்சுமணன் எம்.எல்.ஏ., சிறப்புரையாற்றினார். நிகழ்ச்சியில், முன்னாள் எம்.எல்.ஏ., புஷ்பராஜ், ஒன்றிய செயலாளர்கள் முரளி, ராஜி, மைதிலி ராஜேந்திரன், ஒன்றிய சேர்மன்கள் உஷா, வாசு, துணைச் சேர்மன் பருவ கீர்த்தனா விநாயகமூர்த்தி, மாவட்ட மருத்துவர் அணி துணை அமைப்பாளர் வினோ பாரதி, மீனவரணி அமைப்பாளர் மணி, நகர பொருளாளர் தட்சணாமூர்த்தி, காங்., நகர தலைவர் முஹமது பாரூக், இந்திய கம்யூ., நகர செயலாளர் அப்துல் காதர், முன்னாள் சேர்மன் சிவா, முன்னாள் ஊராட்சி தலைவர் முத்துவேல், அச்சரம்பட்டு வினோத் மற்றும் கவுன்சிலர்கள், நகர நிர்வாகிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.

தொடர்புடைய செய்தி