வானூர்: கல்லூரி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட எம்எல்ஏ

0பார்த்தது
வானூர்: கல்லூரி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட எம்எல்ஏ
வானூர், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு ஒருவார கால பயிற்சி வகுப்பு நடந்து வருகிறது. நான்காம் நாள் நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக போதைப் பொருட்கள் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று (ஜூலை 4) கல்லூரி வளாகத்தில் நடந்தது. 

விழாவில் சிறப்பு விருந்தினராக எம்.எல்.ஏ., சக்கரபாணி கலந்து கொண்டு, ஒழுக்கத்துடன் கல்லூரி படிப்பை தொடர வேண்டும்; மாணவர்கள் போதைப் பழக்கத்திற்கு ஆளாகாமல் உடல் நலனில் அக்கறை செலுத்த வேண்டும்; என அறிவுறுத்தினார். நிகழ்ச்சியில் முதலாம் ஆண்டு மாணவர்கள், பேராசிரியர்கள், அலுவலக பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி