விழுப்புரம் மாவட்டம், வானூர் வட்டம், ஆரோவில் பகுதியைச் சேர்ந்தவர் சி. சங்கராபரணம் (56). இவர், கடந்த நவ. 23-ஆம் தேதி, அதே பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்ததாக கைது செய்யப்பட்டார். இந்த நிலையில், விழுப்புரம் எஸ்.பி. தீபக் சிவாச் பரிந்துரையின்படி, ஆட்சியர் சி. பழனி தடுப்புக் காவலில் சங்கராபரணத்தை கைது செய்ய உத்தரவிட்டார். இதையடுத்து, போலீசார் அவரை சனிக்கிழமை கைது செய்து, கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.