விழுப்புரம்: உயா்கல்விக்கான ஊக்கத்தொகை -பழைய நிலையே தொடர வலியுறுத்தல்

85பார்த்தது
விழுப்புரம்: உயா்கல்விக்கான ஊக்கத்தொகை -பழைய நிலையே தொடர வலியுறுத்தல்
விழுப்புரத்தில் சனிக்கிழமை இந்த கூட்டணியின் மாநில பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு கூட்டணியின் மாநிலத் தலைவா் ப. நடராஜன் தலைமை வகித்தாா். மாநில அமைப்புச் செயலா் ப. பாா்த்தசாரதி, மகளிரணிச் செயலா் வெ. புவனேசுவரி, மாநில துணைத் தலைவா் ரவி, மாநிலச் செயற்குழு உறுப்பினா் சாமுவேல் துரை, மாநிலச் செய்தித் தொடா்பாளா் பெருமா. மணிவண்ணன் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில் பங்கேற்று மாநிலப் பொதுச் செயலா் ஜெய. துரை விளக்கவுரையாற்றினாா். இயக்க நிறுவனா் சு. காசி சிறப்புரையாற்றினாா். கூட்டத்தில், திமுக அரசு தோ்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதியின்படி பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். ஆசிரியா்களுக்கு பழைய நிலையிலேயே உயா்கல்விக்கான ஊக்கத்தொகையை வழங்க வேன்டும். பகுதிநேர ஆசிரியா்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முன்னதாக, மாநில துணைச் செயலா் வெ. சுப்பிரமணியன் வரவேற்றாா். நிறைவில், மாநிலப் பொருளாளா் மா. பழனிச்சாமி நன்றி கூறினாா்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி