புதுச்சேரி, பெரிய காலாப்பட்டு, சுனாமி குடியிருப்பைச் சேர்ந்தவர் ஜெயசீலன், 38; இவர், கடந்த பிப்ரவரி 19ம் தேதி மரக்காணம், கந்தாடு கிராமத்தில் உள்ள தனியார் பள்ளி பின்புற முட்புதரில், கொலை செய்யப்பட்டு கிடந்தார். மரக்காணம் போலீசார் விசாரணை நடத்தியதில், முன் விரோதம் காரணமாக, கந்தாடு கிராமத்தைச் சேர்ந்த எட்டியான் மகன் கரன்குமார், 26; சம்புவேலி தெருவைச் சேர்ந்த வேலு மகன் சீதாராமன், 22; ஆகிய இருவரும், ஜெயசீலனை கொலை செய்தது தெரியவந்தது. இருவரையும் கைது செய்து, சிறையில் அடைத்தனர். தொடர்ந்து, விழுப்புரம் எஸ்.பி., சரவணன் பரிந்துரையின் பேரில், கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான், கொலையாளிகள் இருவரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். அதன்பேரில், கரன்குமார், சீதாராமன் ஆகிய இருவரும் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டதற்கான உத்தரவு நகலை அவர்களிடம் மரக்காணம் போலீசார் நேற்று வழங்கினர்.