தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் விழுப்புரம் மாவட்டப் பிரிவு சாா்பில் விக்கிரவாண்டி மண்டல அளவிலான தடகளப் போட்டிகள், கால்பந்து, கைப்பந்து, வளைகோல்பந்து, வலைபந்து, எறிபந்து, பூப்பந்து, இறகுப்பந்து, கூடைப்பந்து விளையாட்டுப் போட்டிகள் ஆகியவை மாவட்ட விளையாட்டரங்கில் அண்மையில் நடைபெற்றன. இதில் தடகளம் மற்றும் இதர விளையாட்டுப் போட்டிகளில் விழுப்புரம் ஸ்ரீஜெயேந்திர சரஸ்வதி மணிவிழா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் 49 தங்கம், 18 வெள்ளி, 12 வெண்கலம் என மொத்தம் 79 பதக்கங்களை வென்று ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றினா்.
போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கான பாராட்டு விழா பள்ளி வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது (படம்). விழாவில் பள்ளித் தாளாளா் ஜெ. பிரகாஷ், செயலா் பி. கே. ஜனாா்த்தனன், ஆசிரியா்கள் பங்கேற்று வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பாராட்டுத் தெரிவித்து பேசினா்.