விழுப்புரம் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலகத்தில் நேற்று ஒருங்கிணைந்த
குழந்தைகள் வளர்ச்சி திட்டத்துறையின் சார்பில் சமுதாய வளைகாப்பு விழா நடைபெற்றது. இதற்கு
மாவட்ட கலெக்டர் சி. பழனி தலைமை தாங்கினார். நா. புகழேந்தி எம். எல். ஏ. முன்னிலை வகித்தார்.
விழாவில் உயர்கல்வித்துறை அமைச்சர் க. பொன்முடி கலந்துகொண்டு கர்ப்பிணிகளுக்கு
சீர்வரிசை பொருட்களை வழங்கி சிறப்புரையாற்றினார்.