விழுப்புரம் மாவட்டம், கோலியனூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கண்டமானடி ஊராட்சியில், பிரதம மந்திரி ஜன்மந்த் குடியிருப்பு திட்டத்தின்கீழ், இருளர்களுக்கான வீடுகள் கட்டுமானப்பணிகள் நடைபெற்று வருவதை மாவட்ட ஆட்சித்தலைவர் சி. பழனி இன்று நேரில் பார்வையிட்டு, ஆய்வு செய்தார். உடன் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) ஸ்ருதஞ்ஜெய் நாராயணன், திண்டிவனம் சார் ஆட்சியர் திவ்யான்ஷு நிகம் சென்றனர்.