கண்டமங்கலத்தில் விவசாய நிலத்தில் ஆட்சியர் நேரில் ஆய்வு

76பார்த்தது
கண்டமங்கலத்தில் விவசாய நிலத்தில் ஆட்சியர் நேரில் ஆய்வு
கண்டமங்கலம் ஒன்றியம் பக்கிரிபாளையத்தில் விவசாயிகள் டிராகன் பழம் பயிரிட்டுள்ளதை கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பக்கிரிபாளையத்தில் தேசிய தோட்டக்கலை இயக்கத்தின் கீழ் ஒரு ஏக்கருக்கு ரூ. 38,400 மானியத்தில், விவசாயி ஒரு ஏக்கர் பரப்பளவில் டிராகன் பழம் பயிரிட்டு வளர்த்து வருவதை, கலெக்டர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, வேளாண் பொறியியல் துறை சார்பில் ரூ. 62,200 மானியத்துடன் கூடிய ரூ. 1,02,000 மதிப்பிலான களை எடுக்கும் கருவி விவசாயிக்கு வழங்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி