ஆரோவில்லில் ரத்ததான முகாம்

77பார்த்தது
ஆரோவில்லில் ரத்ததான முகாம்
ஆரோவில் கிராம செயல்வழிக்குழுவும், கிளியனூர் வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலையமும் இணைந்து ஏற்பாடு செய்த ரத்ததான முகாம் இரும்பை ரோட்டில் உள்ள அதன் அலுவலகத்தில் நடந்தது. இந்த முகாமில் 50க்கும் மேற்பட்டோர் ரத்ததானம் செய்தனர். தன்னார்வலர்கள் அளித்த ரத்தம், முண்டியம்பாக்கத்தில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு பயன்பெற அனுப்பி வைக்கப்பட்டது. 

முகாமில் ஆரோவில் செயல்வழிக்குழு இயக்குநர் ஜெரால்டு மோரீஸ், கிளியனூர் வட்டார மருத்துவர் ஜெயப்பிரகாஷ், மருத்துவ அதிகாரி புவனராணி ஆகியோர் கலந்து கொண்டனர். முகாமில் ரத்ததானம் வழங்கி தன்னார்வலர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. முகாமிற்கான ஏற்பாடுகளை தெய்வாணை, ரத்த வங்கி மருத்துவர் விஜயா, ஆற்றுப்படுத்துனர் அசோக்குமார், ஆரோவில் கிராம செயல்வழிக்குழு பணியாளர்கள் செய்திருந்தனர்.

தொடர்புடைய செய்தி