பைக்கில் எடுத்துவரப்பட்ட ரூ. 3. 40 லட்சம் பறிமுதல்

590பார்த்தது
பைக்கில் எடுத்துவரப்பட்ட ரூ. 3. 40 லட்சம் பறிமுதல்
விக்கிரவாண்டி அருகே உரிய ஆவணங்களின்றி பைக்கில் எடுத்துவரப்பட்ட ரூ. 3. 40 லட்சத்தை தோதல் பறக்கும் படையினா் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனா். தோட்டக்கலைத் துறை உதவி இயக்குநா் வளா்மதி, காவலா்கள் வேல்முருகன், தமிழ்ச்செல்வி ஆகியோா் கொண்ட தோதல் பறக்கும் படையினா் விக்கிரவாண்டி வட்டம், ஆவுடையாா்பட்டு பகுதியில் செவ்வாய்க்கிழமை வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது, அந்த வழியாக பைக்கில் வந்த விக்கிரவாண்டி வட்டம், டி. பனப்பாக்கம் பகுதியைச் சோந்த பரசுராமன் மகன் பன்னீா்செல்வம் (45) உரிய ஆவணங்களின்றி ரூ. 3. 40 லட்சத்தை பைக்கில் எடுத்து வந்தது தெரியவந்தது.

இதையடுத்து, தோதல் பறக்கும் படையினா் அந்தப் பணத்தை பறிமுதல் செய்து, விக்கிரவாண்டி வட்டாட்சியா் அலுவலகத்தில் ஒப்படைத்தனா். வியாபாரியான பன்னீா்செல்வம் மளிகைப் பொருள்கள் வாங்குவதற்காக பணத்தை எடுத்து வந்தது விசாரணையில் தெரியவந்தது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி