விழுப்புரம், கோலியனூர் ரோடு - பண்ருட்டி, வடலூர், சேத்தியாதோப்பு செல்லும் சாலையில் குண்டும் குழியுமாக உள்ளதால் வாகன ஒட்டுகள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். மேலும் சில இடங்களில் புழுதி பொழிவு அதிகமாக ஏற்படுவதால் பயணிகள் அவதியடைந்து வருகின்றனர். இதனால், விபத்துகள் ஏற்படும் வாய்ப்பு உள்ளதால் சாலையை சீரமைக்க இப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.