விழுப்புரத்தில் சாலைகளில் மாடுகளைத் திரிய விட்டால் பிடித்து ஏலத்தில் விடப்படும் என நகராட்சி சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து நகர் மன்ற தலைவர் தமிழ்ச்செல்வி, கமிஷனர் ரமேஷ் ஆகியோரது செய்திக்குறிப்பு: பொதுமக்கள் தாங்கள் வளர்க்கும் மாடுகளை பொது சாலைகளில் திரிய விடக்கூடாது. அவ்வாறு சாலைகளில் திரிவதால் பொதுமக்கள், வாகன ஓட்டிகளுக்கு மிகவும் அச்சுறுத்தலாகவும், விபத்துகள் ஏற்பட வாய்ப்புள்ளதோடு, பொது சுகாதாரத்திற்கு கேடு விளைவிப்பதாக உள்ளது. மாடுகளை அவரவர் சொந்த இடத்தில் கட்டி வளர்க்க வேண்டும். இதை மீறி பொது சாலைகள், பொது இடங்களில் மாடுகளை திரிய விட்டால் உரிய நடவடிக்கை எடுப்பதோடு, மாடுகளைப் பிடித்து அன்றே ஏலத்தில் விடப்படும். அதன் மூலம் கிடைக்கும் வருவாய் நகராட்சி நிதியில் செலுத்தப்படும். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.