வானூர் அடுத்த பூத்துறை கிராமத்தை சேர்ந்தவர் அய்யனார். இவர் வீட்டில் மாடுகள் வளர்த்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் பூத்துறை பகுதியில் பலத்த காற்று வீசியுள்ளது. இதன் காரணமாக ஏரி புறம்போக்கு பகுதியில் சென்ற மின்கம்பி அறுந்து விழுந்துள்ளது.
நேற்று காலை அய்யனாரின் மாடுகள், அப்பகுதிக்கு மேய்ச்சலுக்கு சென்ற போது, அறுந்து கிடந்த மின்கம்பியில், பசு மாடு ஒன்று சிக்கி, இறந்தது. இது போன்று பூத்துறை பகுதியில் அடிக்கடி மின்சார கம்பிகள் அறுந்து விழுவதும், மாடுகள் சிக்கி இறப்பதும் தொடர் கதையாக உள்ளது.
எனவே மின்சார கம்பங்கள் மற்றும் மின் கம்பிகளை அதிகாரிகள் ஆராய்ந்து, சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.