போக்குவரத்து காவலரிடம் ரகளையில் ஈடுபட்ட வாலிபர்கள்

78பார்த்தது
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் மருத்துவமனை சாலையில் இரண்டு வாலிபர்கள் கஞ்சா போதையில் ரகளையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

தகவல் அறிந்து அருகில் இருந்த போக்குவரத்து உதவி ஆய்வாளர் கார்த்திகேயன் உள்ளிட்ட போக்குவரத்து போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தியதில் திருக்கோவிலூர் பகுதியைச் சேர்ந்த விக்னேஷ் (22) மாதேஸ்வரன் (22) ஆகிய இருவரும் அதிகளவு கஞ்சா போதையில் ரகளை ஈடுபட்டுக் கொண்டிருந்தனர் அதன் பிறகு வாலிபரின் இருசக்கர வாகனத்திலிருந்து சாவியை போலீசார் பறித்ததாக கூறப்படுகிறது.

இதனால் கஞ்சா போதை ஆசாமிகள் போக்குவரத்து உதவி ஆய்வாளர் கார்த்திகேயனை மார்பில் தள்ளுவது சட்டையை பிடிப்பது ரகளை ஈடுபட்டு எங்கள் இருசக்கர வாகன சாவியை நீ எப்படி எடுக்கலாம் என்று தகாத வார்த்தைகளால் திட்டி ஒருமையில் பேசியதாக கூறப்படுகிறது.

அதன் பிறகு தகவல் அறிந்த திருக்கோவிலூர் காவல் நிலைய போலீசார் இளைஞர்களை பிடித்து காவல் நிலையத்தில் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்

காவல் நிலையத்திலும் போலீசாரை ஒருமையில் பேசி திட்டி வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் என்ன செய்வது என்று தெரியாமல் போலீசார் தடுமாறினர் அதிகளவு கஞ்சா போதையில் இருந்ததால் இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி