விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லுார் இன்ஸ்பெக்டர் மைக்கேல் இருதயராஜ் தலைமையிலான போலீசார் பருகம்பட்டு கிராம பகுதியில் நேற்று (ஜூன் 8) ரோந்துசென்றனர். அப்போது அப்பகுதியில் உள்ள பெட்டிக் கடையில் குட்கா விற்ற அதே பகுதியைச் சேர்ந்த தங்கமணி மனைவி கீதாராணி, 45; என்பவரை கைது செய்து இவரிடமிருந்து 60 குட்கா பாக்கெட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.