விழுப்புரம் மாவட்டம், அரகண்டநல்லூர் அடுத்துள்ள, அருணாபுரம் ஊராட்சியில் அமைந்துள்ள, அருள்மிகு ஸ்ரீ கூத்தாண்டவர் ஆலயத்தில், 520வது ஆண்டு புகழ் பெற்ற திருத்தேர் உற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கிய நிலையில் அரவானுக்கு வேண்டி திருநங்கைகள் பூசாரிக்கையில் தாலி கட்டும் நிகழ்வு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்