விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூர் அருகே உள்ள மணம்பூண்டி பகுதியில் அமைந்துள்ளது ஶ்ரீ ரகூத்தமதீர்த்தர் மற்றும் ஸ்ரீ சத்தியப்ரமோத தீர்த்தர் மூல பிருந்தாவனம் அமைந்துள்ளது. இந்த கோவிலில் 452ஆம் ஆண்டு வீர ரகூத்தம தீர்த்த ஆராதனை மகா உற்சவம் நடைபெற்று வருவதால் வெளிமாநிலங்களில் இருந்தும் வெளி மாவட்டங்களில் இருந்தும், சாமி தரிசனம் செய்வதற்கு அதிகளவிலான பக்தர்கள் தங்களது வாகனங்களில் வந்துள்ளனர். இவர்களின் வாகனங்களை கோவிலின் வளாகத்தில் நிறுத்துவதற்கு இடம் இல்லாததால் சாலையில் இருபுறங்களிலும் நிறுத்தி வைத்துள்ளனர். விழுப்புரம் - திருக்கோவிலூர் செல்லும் பிரதான சாலையில் வாகனங்கள் அணிவகுத்து நிறுத்தி வைத்திருப்பதால் திருக்கோவிலூர் - விழுப்புரம் - திருவண்ணாமலை மார்க்கமாக பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்கள், மக்கள் என அனைத்து தரப்பட்ட மக்களும் கடுமையான போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவித்து வருகின்றனர்.