திருக்கோவிலூர் சந்தப்பேட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் எதிரில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக நகராட்சி நிர்வாகம் சார்பில் அமைக்கப்பட்டிருக்கும் பயணிகள் நிழல் குடை தற்போது தனி நபர்களின் ஆக்கிரமித்து உணவகம் நடத்தி வருகின்றனர். இதனால் வெயில் மற்றும் மழை நேரங்களில் பொதுமக்கள் நிற்க இடம் இன்றி தவிக்கின்றனர். நகராட்சி நிர்வாகம் உடனடியாக ஆக்கிரமிப்புகளை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.