திருக்கோவிலூர்: முருகர் கோயிலில் கிருத்திகை வழிபாடு

56பார்த்தது
திருக்கோவிலூர்: முருகர் கோயிலில் கிருத்திகை வழிபாடு
திருக்கோவிலுார் பாலசுப்ரமணியர் கோயிலில் மார்கழி கிருத்திகையை முன்னிட்டு வள்ளி தேவசேனா சமேத பாலசுப்பிரமணியர் தங்க காப்பு அலங்காரத்தில் அருள் பாலித்தார்.

திருக்கோவிலுார், மருத்துவமனை ரோட்டில் உள்ள பாலசுப்பிரமணியர் கோவிலில் மார்கழி மாத கிருத்திகையை முன்னிட்டு நேற்று (ஜனவரி 9) காலை வள்ளிதேவசேனா சமேத சுப்பிரமணிய சுவாமிக்கு மகா அபிஷேகம், தங்க காப்பு அலங்காரம் நடந்தது. 

மாலை 6:00 மணிக்கு அர்ச்சனை, தீபாராதனை, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.பரனுார் அம்பலவாணன் குழுவினரின் நாம சங்கீர்த்தனம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி