விழுப்புரம் மாவட்டம், பெரியசெவலை செங்கல்வராயன் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் கடந்த 2 நாட்களாக மாட்டு வண்டியில் ஏற்றி வரும் கரும்புகளை அரைப்பதற்கு அனுமதி வழங்கமருத்து வரும் கூட்டுறவு சர்க்கரை ஆலை நிர்வாகத்தை கண்டித்து மாட்டுவண்டி தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பில் உளுந்தூர்பேட்டை திருவெண்ணெய்நல்லூர் பிரதான சாலையில் மறியலில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இரண்டு நாட்களாக மாடுகள் பசியோட இருப்பதாகவும் உணவு அளிக்க முடியாமல் காத்திருப்பதாகவும் எனவே மாட்டு வண்டியில் வரும் கரும்புகளை முதலில் அனுமதிக்கப்பட்டு அரைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அதிகாரிகளிடம் முறையிட சென்றால் எங்களை அலுவலகத்தை விட்டு வெளியே போங்கள் என்று ஒருமையில் திட்டு வதாகவும் மாட்டு வண்டி தொழிலாளர்கள் சார்பில் குற்றம் சாட்டுகின்றனர்.
சாலை மறியலில் ஈடுபட்ட தகவல் அறிந்து விரைந்து வந்த திருவெண்ணெய்நல்லூர் போலீசார் மாட்டு வண்டி தொழிலாளிகளிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
நீண்ட நேர இடைவெளிக்குப் பிறகு நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதி அளித்த காரணத்தால் சாலை மறியலை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர் இதனால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.