விழுப்புரம்: டிராக்டரில் இருந்த பேட்டரி மட்டும் இரும்பு ராடுகள் திருட்டு

62பார்த்தது
விழுப்புரம் மாவட்டம், பெரியசெவலை செங்கல்வராயன் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் கரும்பு அரவைக்காக விவசாயிகள் 100 க்கும் மேற்பட்ட டிராக்டர்கள் ஆலையின் அருகில் சாலையோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. காத்திருக்கும் நேரத்தில் சாப்பிடுவதற்காக அனைத்து விவசாயிகள் மற்றும் ஓட்டுநர்கள் ஹோட்டலுக்கு சென்று விடுவதால் அதை சரியாக பயன்படுத்தி 5க்கும் மேற்பட்ட டிராக்டரில் விலை உயர்ந்த பேட்டரி மற்றும் இரும்பு ராடுகளை மர்ம திருடி சென்றுள்ளனர்.

 டிராக்டரில் பேட்டரி இல்லாமல் லோடு வண்டியை இயக்க முடியாமல் விவசாயிகள் கடும் சிரமம் அடைந்து வருவதால் இது குறித்து திருவெண்ணெய்நல்லூர் போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், அப்பகுதியில் சிசிடிவி கேமரா பொருத்த வேண்டும் என விவசாயிகள் மற்றும் வாகன ஓட்டுனர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி