முன்னாள் அமைச்சர் செஞ்சி மஸ்தான் இன்று விழுப்புரம் மாவட்டத்தில் பல்வேறு விழாக்களில் கலந்துகொண்டு விழாக்களை சிறப்பித்தார். அதன் விவரங்கள் வருமாறு, வடக்கு மாவட்டம் - மேல்மலையனூர் ஒன்றியம், அவலூர்பேட்டை ஊராட்சி ஸ்ரீ மொட்டை விநாயகர் என்கிற முத்து விநாயகர் ஆலய கும்பாபிஷேக விழா, வடக்கு மாவட்டம் - மேல்மலையனூர் ஒன்றியம், தாழங்குணம் கலைஞரின் கனவு இல்ல புதுமனை புகு விழா, மேல்மலையனூர் ஒன்றியம், எதப்பட்டு குமார் - பவானி இல்ல திருமண வரவேற்பு விழா, மேல்மலையனூர் ஒன்றியம், அண்ணமங்கலம் கிராமம் அரசு மேல்நிலை பள்ளி உடற்கல்வி ஆசிரியர் திரு.சீனுவாசன் பணி நிறைவு பாராட்டு விழா என பல்வேறு விழாக்களில் கலந்து கொண்டதாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.