கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் நகராட்சிக்குட்பட்ட பகுதியில், அதிமுக சார்பில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 72 ஆவது பிறந்தநாள் விழாவை ஒட்டி கபடி போட்டி நடத்தப்பட்டது. இதில் வெற்றி பெற்ற அணியினருக்கு கள்ளக்குறிச்சி மாவட்ட கழக செயலாளர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் குமரகுரு இன்று (மார்ச் 16) பரிசுக் கோப்பையை வழங்கினார். உடன் அதிமுக நகர செயலாளர் சுப்பிரமணியன் , ஒன்றிய செயலாளர் பழனி உள்ளிட்ட மாவட்ட ஒன்றிய நகர நிர்வாகிகள் உடன் இருந்தனர்.