விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பல்வேறு இடங்களில் இன்று திருக்கோவிலூர் சட்டமன்ற உறுப்பினரும், தமிழ்நாடு உயர்கல்வித்துறை அமைச்சருமான பொன்முடி மற்றும் விழுப்புரம் தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் பொன். கௌதம சிகாமணி ஆகியோர், திமுகவின் பவள விழாவை ஒட்டி வலையாம்பட்டு, மேலமங்கலம், செம்மார், ஏனாதிமங்கலம் ஆகிய பகுதிகளில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் கொடியை ஏற்றிவைத்து, கட்சியின் பவள விழா குறித்தும், கலைஞரின் நூற்றாண்டு குறித்தும் உரையாற்றினார். இந்நிகழ்வின் ஒரு பகுதியாக, ஏனாதிமங்கலம் கிராமத்தில் அவர் கொடியேற்றிய பின் அமைச்சர் பேசியபோது. திமுக தற்போது பவள விழா ஆண்டு கொண்டாடி வருகிறது வெள்ளி விழா என்றால் 25 ஆண்டுகள், தங்கம் என்றால் 50 ஆண்டுகள், 75 ஆண்டுகள் ஆனதால் தற்போது பவள விழாவை கொண்டாடி வருகிறது. இந்த நிலையில், முதல்வருக்கு பின்னால் தமிழகத்தை வழிநடத்தக்கூடிய ஒரு இளைஞர் உதயநிதி ஸ்டாலின் என்றும், வெகு விரைவில் துணை முதல்வராக அறிவிப்பு வெளி வரும், இளைஞர் அனைவரும் அவரது கையில் உள்ளனர், இளைஞரை வழிநடத்திச் செல்லும் ஆற்றல் உதயநிதி ஸ்டாலினிடம் உள்ளது. சிறுவயது முதலே அண்ணா பெரியார் கலைஞர் வழியில் வந்தவர் என்று பேசினார்.