விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணைநல்லூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட, டி. எடையார் கிராமத்தில் 15வது மத்திய நிதி குழு மானிய திட்டத்தில் ரூ. 7.50 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்ட பொது கழிப்பறை கட்டடம் திறப்பு விழா நடைபெற்றது.
இதில் வட்டார வளர்ச்சி அலுவலர் பாலசுப்பிரமணியன் தலைமை தாங்கினார். திருவெண்ணைநல்லூர் ஒன்றிய சேர்மன் ஓம்சிவசக்திவேல் முன்னிலை வகித்தார். ஊராட்சி மன்றத் தலைவர் சுந்தரமூர்த்தி அனைவரையும் வரவேற்றார். மாவட்ட கவுன்சிலர் பி.வி.ஆர். விசுவநாதன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.