மனம்பூண்டி பகுதியில் குட்கா விற்பனை செய்த நபர் கைது

365பார்த்தது
மனம்பூண்டி பகுதியில் குட்கா விற்பனை செய்த நபர் கைது
அரகண்டநல்லுார் அடுத்து மணம்பூண்டியைச் சேர்ந்தவர் குருராஜ், 40; அதே பகுதியில் பெட்டிக்கடை வைத்துள்ளார். இவரது கடையில் குட்கா பொருட்கள் விற்கப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில், அரகண்டநல்லுார் இன்ஸ்பெக்டர் பிரேம் ஆனந்த், சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் சண்முகசுந்தரம் மற்றும் போலீசார் நேற்று காலை சோதனை மேற்கொண்டனர். அப்போது கடையில் இருந்த 95 குட்கா பாக்கெட்டுகளை கைப்பற்றி, குருராஜ் மீது வழக்குப் பதிந்து கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி