விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரம் பேருந்து நிலையம. அருகே நேற்று போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு அதே கிராமத்தை சேர்ந்த ராஜன் என்பவர் அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்து கொண்டிருந்தார். இதனையடுத்து போலீசார் அவரை கைது செய்து, அவரிடமிருந்த 10-க்கும் மேற்பட்ட லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்தனர்.