மணலூர்பேட்டை பிரயோக வரதராஜ பெருமாள் கோவிலில் நகை திருட்டு

58பார்த்தது
மணலூர்பேட்டை பிரயோக வரதராஜ பெருமாள் கோவிலில் நகை திருட்டு
விழுப்புரம் அடுத்த திருக்கோவிலூர் அருகே உள்ள மணலூர்பேட்டையில் பிரயோக வரதராஜ பெரு மாள் கோவில் உள்ளது. சம்பவத்தன்று இரவு பூஜை முடிந்த பின்னர் அர்ச்சகர் ஜெகதீசன் மற்றும் பணியாளர் சண்முகம் ஆகியோர் வழக்கம் போல் கோவிலை பூட்டி விட்டு வீட் டுக்கு சென்றனர். பின்னர் அவர்கள் மறுநாள் காலையில் பூஜைக்காககோவிலை திறந்து பார்த்தபோது சாமியின் கழுத்தில் இருந்த தலா 2 கிராம் எடை கொண்ட 2 தங்க பொட்டுகளை காணாமல் அதிர்ச்சி அடைந்தனர். அதை யாரோ மர்ம நபர்கள் திருடிச்சென்றது தெரியவந்தது. திருடுபோன தங்க பொட்டுகளின் மதிப்பு ரூ. 25 ஆயிரம் இருக்கும் என கூறப்படுகிறது. பின்னர் இது குறித்து போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன் பேரில் மணலூர்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ் பெக்டர் திருமால் தலைமையிலான போலீசார் விரைந்து வந்து திருட்டு நடைபெற்ற கோவிலை பார்வையிட்டு அக்கம் பக்கத்தினரிடம் விசாரணை நடத்தினர். மேலும் அங்குள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தபோது அதில் கடந்த 1-ந் தேதி காலை 6 மணியளவில் ஒரு பெண் கோவில் கருவறைக்குள்ளே சென்று சாமியின் கழுத்தில் கிடந்த நகை களை திருடி செல்வது தெரியவந்தது. இதையடுத்து அந்த பெண் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி அவரை வலைவீசி தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் மணலூர்பேட்டை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி