திருவெண்ணெய்நல்லுாரில் நகர்புற வேலைவாய்ப்பு திட்டத்தை பேரூராட்சி சேர்மன் அஞ்சுகம் கணேசன் துவக்கி வைத்தார்.
திருவெண்ணெய்நல்லுார் அடுத்த பேரூராட்சி பகுதியில் புதியதாக கொண்டுவரப்பட்ட நகர்புற வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் பணியை பேரூராட்சி சேர்மன் அஞ்சுகம் கணேசன் துவக்கி வைத்தார்.
பேரூராட்சி துணை சேர்மன் ஜோதி, பேரூராட்சி கவுன்சிலர்கள் சலீமா தாஜீதீன், பாபு, அம்சவள்ளி ராஜேந்தின், ரஹமத்துன்னிசா ஷாஜகான், செந்தில்முருகன், பாக்கியராஜ், நகர செயலாளர் கணேசன் உட்பட பொதுமக்கள் பலர் பங்கேற்றனர்.