திருக்கோவிலூர் பகுதியில் மூன்றாவது நாளாக பெய்துவரும் கனமழை

66பார்த்தது
கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் சுற்றுவட்டார பகுதியில் சில தினங்களாக கடும் வெயில் வாட்டி வந்த நிலையில் திருக்கோவிலூர் சுற்றுவட்டார பகுதியில் கடந்த இரண்டு தினங்களாக பலத்த காற்று இரவு நேரத்தில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்றும் மூன்றாவது நாளாக, கள்ளக்குறிச்சி மாவட்டம்
திருக்கோவிலூர், விளந்தை, மணலூர்பேட்டை, ஜம்பை, மேமலூர், முடியனூர், தகடி பழங்கூர், சந்தைப்பேட்டை, வடக்கு நெமிலி, அரியூர், தேவியகரம், ஆலூர் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக பலத்த கனமழை பெய்து வருவதால் சாலையில் பெருக்கெடுத்து ஓடும் மழைநீர் இந்த கன மழையால் மானாவரி பயிர் செய்யும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதே போல் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மனம் பூண்டி, அரகண்டநல்லூர், தேவனூர், கோட்ட மருதூர் பாவந்தூர், கொளத்தூர், எடப்பாளையம், சித்தலிங்கமடம் உள்ளிட்ட பல்வேறு பகுதியிலும் கன மழை பெய்து வருகிறது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி