விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில், இன்று மாலை கனமழை பெய்தது. கோடை வெயிலின் வெப்பத்தை தணிக்க மாலையில் திடீரென மழை பெய்தது மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. இதனிடையே, தமிழ்நாட்டில் விழுப்புரம் உள்ளிட்ட ஒன்பது மாவட்டங்களில் நாளை கன மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.